ஞாயிற்று கிழமை நாளில் விநாயகர் பிரதானமாக இருக்க கூடிய ஆலையத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதிகாலையில் குளித்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். தேங்காயை இரண்டாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய்யை நிரப்பி கொள்ள வேண்டும். மஞ்சள் துணியில் கோதுமையை மூட்டையாக கட்டி அதைதேங்காயில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல்லை சாமிக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதையடுத்து கோயிலை 21 முறை சுத்தி வந்து வழிபட வேண்டும்..